திருமண 10 பொருத்தம் & ரஜ்ஜு பொருத்தம் இலவசமாகப் பார்க்க (10 Porutham in Tamil)
திருமண வாழ்வில் தம்பதியரிடையே நீடித்த அன்பு, ஆரோக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் மாங்கல்ய பலம் நிலைத்திருக்க 10 பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. மேலே "திருமண 10 பொருத்தம்" பகுதியைத் திறந்து மணமகள் மற்றும் மணமகன் விவரங்களை உள்ளிட்டு உடனே 10 பொருத்த முடிவைப் பாருங்கள்.
10 பொருத்தங்களில் மிக முக்கியமான 5 பொருத்தங்கள் எவை?
தினப் பொருத்தம், கணப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலான மாங்கல்ய பலத்தைத் தரும் "ரஜ்ஜுப் பொருத்தம்" (மற்றும் வேதை இல்லாமை) ஆகிய 5 பொருத்தங்களும் மிக முக்கியமானவை. ரஜ்ஜு தட்டினால் (ஏக ரஜ்ஜு) தகுந்த ஜாதக சுப பார்வை உள்ளதா என ஆராய வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
❓ 10-க்கு எத்தனை பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்?
ரஜ்ஜு மற்றும் வேதைப் பொருத்தத்துடன் குறைந்தது 6 அல்லது அதற்கு மேற்பட்ட பொருத்தங்கள் அமைவது உத்தமம்.